Wednesday, 30 October 2013

இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்!

இன்போஸிஸ் நிறுவனம் அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் என்ஞ்னியர்களை அனுப்புவதில் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு ரூ.215 கோடி (35 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது.இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபாரதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.அமெரிக்காவில் அந்நாட்டினரை ஒதுக்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து வெளிநாட்டைச்சேர்ந்தவர்களை பணியில்...

இன்று வல்லபாய் படேல் பிறந்த தினம்!

 31 October 1875 – 15 December 1950 (aged 75)தற்போது நாட்டில் 28 மாநிலங்கள்,7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இது, இவர் இல்லையென்றால் இருந்திருக்காது.சிதறுண்டு கிடந்தஇந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர். அவர் தான் இந்தியாவின் “இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்.இன்று இவரது பிறந்ததினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது....

குழந்தைகள் இதய நலம் தாய்மார்கள் கையில்!

திரைப்படம் உலகம் எவ்வளவு வேகமாக மாறிவருகிறதோ அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறிவருகிறது. உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த காலத்திலும் நோய்கள் இருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் இயற்கை வைத்தியத்துக்கு கட்டுப்பட்டன. தற்போது பலர் செய்யும் வேலையை ஒரு எந்திரமே செய்து விடுகிறது. சிந்திக்கும் விஷயங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாமல் காரியம் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது....

திரையுலகில் சரித்திர, புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம்!

திரையுலகில் சரித்திர புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க நடிகர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.ரஜினியின் கோச்சடையானும், செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படமும் இதே கதையம்சத்தில் வருகின்றன. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் தயாராகும் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையம்சம் கொண்டது.கோச்சடையான் படத்தில் ரஜினி மன்னன், இளவரசன் என இரு வேடங்களில் வருகிறார். புராண காலத்தில்...

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ டிராப் ஆனது?

நடிகர் சிம்பு ‘வாலு’, ‘வேட்டைமன்னன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களையும் நீண்டகாலமாக கடத்தி வந்த சிம்பு சமீபகாலமாக ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட ‘வேட்டை மன்னன்’ படம் குறித்து சிம்பு வாய் திறக்காமலே உள்ளார். இப்படத்தை நிக் ஆர்ட்ஸ்...

குழந்தைகள் உலகம்.....தொடர் பதிவு

இன்று குழந்தைகள் ..அந்த வயதில் நாம் இருந்ததைவிட புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை வழி நடத்திச் செல்ல பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியவைகளே அதிகம்.ஆகவே இத் தொடர் பதிவில் பெற்றோர்கள் பற்றியே எழுதியுள்ளேன்.மழலையர் உலகம்.....ஆஹா..சூது..வாது இல்லாத உலகம்...மழலைச்சொல்..இசையைப்போல மனதை மயக்கக்கூடியது...அதனால் தான் வள்ளுவனும்குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.                   ...

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டைஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை"பளிங்கினால் ஒரு மாளிகை...பவளத்தால் மணிமண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம்...உன்னை அழைக்குது வா..." என்ற பாடலை முணுமுணுப்-பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நின்று பாடவேண்டிய சரியான இடம் ஆக்ரா கோட்டைதான். இது ஒரு அரண்மனை நகரம். இங்கு சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் கலைப்பொக்கிஷங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.வரலாற்றின் வளமான பக்கங்கள்பல மொகலாய மன்னர்களின் வசந்தமான வாழ்க்கையால்...

இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட்!

சரக்கு உள்ளே போயிட்டா, தலைவர் பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியல…-என்ன பண்றார்?-பட்டாசு கடையில போய்ஊறுகா வெடி இருக்கான்னு கேட்குறார்..!-——————————————————————–-இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட் வெடின்னு எப்படிச் சொல்றே?-கரெக்டா புறம்போக்கு நிலத்துல போய் விழுந்திருக்கே…!-——————————————————-என்னதான் பட்டாசு கடைக்காரர் தேர்தல்ல நின்னாலும் அவருக்கும் வோட்டுதான் விழும், வேட்டு விழாது...

சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

சத்துமாவு தயார் செய்ய… தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு...

இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!

உறவுகள் மட்டுமல்ல ஊரும் மரணத்திற்கு அழுதால் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !-—————–-இறப்பு இல்லை இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள் !-——————-வராது நோய் பசித்த பின் புசித்தால் !-———————-உச்சரிக்க வேண்டாம் முன்னேற்றத்தின் எதிரிகள் முடியாது தெரியாது நடக்காது !-———————- -நாளை என்று நாளைத் தள்ளிட நாள் உன்னைத் தள்ளும் !-——————-உடலை உருக்கும் உருவமில்லா நோய் கவலை !-——————–-பெறுவதை விட கொடுப்பதே இன்பம் பொதுநலம் !பெறுவதை விட கொடுப்பதே இன்பம் பொதுநலம்...

உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!

உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக்கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத்தகைய அடிமைத்தனத்தால், இத்தனை நாட்கள் உயிர்...

ஜானகியுடன் பாடிய தனுஷ்!

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷுடன் ஜானகியம்மா மெலடி பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம்.தற்போது 75 வயதாகும் ஜானகியம்மா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாடும் பாடல் இது.ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறா...

கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.வாழ்நாளை யாராலும் அதிகப்படுத்த முடியாது. ஆனால் அர்த்தப்படுத்த முடியும். மேலும் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார் என்பது தெரியாது, என்றாலும் நம்பிக்கையோடு எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கிறோம். அவ்வாறன இலட்சியக் கனவுகளை எவ்வளவு விரைவில் நனவுகளாக மாற்றப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.கனவு காண்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடாமல் உங்களுக்குத் தேவையானது எது? தேவையற்றது எது? என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானம் செய்து...

Xolo Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999 விலையில் அறிமுகம்

Xolo சமீபத்தில் Q தொடர் வரிசையில் Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999  விலையில் வெளியிட்டுள்ளது. புதிய Xolo ஸ்மார்ட்போன் Q ஸ்மார்ட்போன் தொடர் வரிசையை விரிவுபடுத்தி ஏற்கனவே Xolo Q700, Xolo Q600, Xolo Q1000, Xolo Q1000S, மற்றும் Xolo Q800 போன்ற ஃபோன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் Quad-core ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.Xolo Q900: 312ppi பிக்சல் அடர்த்தி அதிகம் கொண்ட 4.7-இன்ச் ஹச்டி (720x1280 பிக்சல்) டிஎஃப்டி டிஸ்ப்ளே...

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில்...

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல5. ...

நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத வார்த்தைகள் சில!

அஅகங்காரம் - செருக்குஅக்கிரமம் - முறைகேடுஅசலம் - உறுப்புஅசூயை - பொறாமைஅதிபர் - தலைவர்அதிருப்தி - மனக்குறைஅதிருஷ்டம்- ஆகூழ், தற்போதுஅத்தியாவசியம் --இன்றியமையாததுஅநாவசியம் -வேண்டாததுஅநேகம் - பலஅந்தரங்கம்- மறைபொருள்அபகரி -பறி, கைப்பற்றுஅபாயம் -இடர்அபிப்ராயம் -கருத்துஅபிஷேகம் -திருமுழுக்குஅபூர்வம் -புதுமைஅமிசம் -கூறுபாடுஅயோக்கியன் -நேர்மையற்றவன்அர்த்தநாரி -உமைபாகன்அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்தஅர்த்தம் -பொருள்அர்த்த ஜாமம் - நள்ளிரவுஅர்ப்பணம் -படையல்அலங்காரம் -ஒப்பனைஅலட்சியம் - புறக்கணிப்புஅவசரமாக - உடனடியாக, விரைவாகஅவஸ்தை - நிலை, தொல்லைஅற்பமான...

இப்படியும் சில பழமொழிகள்!

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்* கார் ஓட டயரும் தேயும்* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்* முடியுள்ள போதே சீவிக்கொள்* பழகின செறுப்பு காலை கடிக்காது* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம்...