Saturday, 16 November 2013

சம்பங்கி பூவின் மகத்துவம்!

பூஜைக்கு உகந்த சம்பங்கி பூ. மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது சம்பங்கி பூ. அவ்வளவு சீக்கிரத்தில் வாடாது. இதன் பூ இதழ்களும், தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது. சம்பங்கி பூஜைக்கு ஏற்ற பூவாக மட்டும் இல்லாமல், பல்வேறு வகைகளில் பலன் தர கூடியதாக உள்ளது. சம்பங்கி பூவின் பலன்களை பார்ப்போம்.சம்பங்கி தைலம்அரை கிலோ தேங்காய் எண்ணெயில், 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு நன்கு காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணெய் தான் சம்பங்கி...

இலவசமான அழகான பத்து எழுத்துருக்கள் (fonts)

கணினி வைத்திருக்கின்ற எல்லோருக்குமே அழகான எழுத்துருக்கள் என்றால் பிடிக்கும். Graphic Desinging செய்கின்றவர்களுக்கு எழுத்துருக்கள் இன்றியமையாதவை. கீழே தரப்பட்டிருக்கின்ற எழுத்துருக்கள் எல்லாம் இலவசமானவை. உடனே தரவறிக்கிக் கொள்ளுங்கள்.PetitaLavenderiaHagin CapsZnikomitChunkFive     CantibleCodeHomesteadRieslingSigner...

தொடாமலே மின்சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்ச்!

கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்சை கண்டுபிடித்துள்ளார் கிராமத்து பொறியாளர் ஹரிராம்சந்தர். இவர் வடிவமைத்துள்ள இந்த டச்லெஸ் சுவிட்ச், இன்பிரா ரெட் (அகச்சிவப்பு கதிர்) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இளம் பொறியாளர் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த இளம் பொறியாளர் ஹரிராம்சந்தர். 23 வயதாகும் இந்த பி.டெக். (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பட்டதாரிக்கு பள்ளியில் படிக்கின்ற...

வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.சிறுநீரகத்தில்...

முருங்கைப்பூ சாதம்!

என்னென்ன தேவை? முருங்கைப்பூ - 2 கப், சின்ன வெங்காயம் - 50 கிராம்,கடுகு - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், வடித்த சாதம் - 2 கப், மஞ்சள் தூள் - சிறிது, உப்பு - தேவையான அளவு.எப்படிச் செய்வது? முருங்கைப்பூவை நன்கு அலசவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும்  மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு, முருங்கைப்பூ எல்லாவற்றையும்...

கூடாத ஆமைகள்!

ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்று வளர்க்கிறார்கள்.எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை.அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது!அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள் இருக்க வேண்டியது!வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்!இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டு...

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன்...

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு!

கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனத் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக மக்கள் தொகை யில் முதல் இடத்தில் உள்ளது சீனா. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 18.5 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 22.1 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.1 கோடி முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள்....

இன்டர்நெட்டை கலக்கும் கூகுள் விளம்பரம்(google adsense)!

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த நண்பர்கள் இருவர் மீண்டும் சந்திப்பது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் இன்டர்நெட்டை கலக்கி வருகிறது. இரண்டே நாளில் இதுவரை 27 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.கூகுள் நிறுவனம் தனது சர்ச் இன்ஜினை பிரபலப்படுத்துவதற்காக எடுத்த விளம்பரம் அது. டெல்லியில் வயதான தாத்தா, தனது பேத்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.ஒரு புத்தகத்தில் இருக்கும் பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவைக் காட்டி, அதில் இருக்கும் தனது...

கூகுள் நிறுவனம் மாணவர்களுக்காக கல்வி அப்பிளிக்கேஷன் வெளியீடு!

கூகுள் நிறுவனமானது தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது. Google Play for Education எனும் இச்சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு சாதனங்களில்...

மோட்டோரொல்லா நிறுவனம் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மோட்டோரொல்லா நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 179 அமெரிக்க டாலர் விலை கொண்ட குவாட் கோர் ப்ராசசர் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோரொல்லா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெயர் மோட்டோ 'ஜி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் 8 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 179 அமெரிக்க டாலர்களாகவும், 16 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 199 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது. கூகிள் உரிமை கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான மோட்டோரொல்லா அடுத்த...

சூர்யா (நடிகர்) - வாழ்க்கை வரலாறு (Biography)

எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா அவர்கள். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனும், தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கிய நடிகை ஜோதிகாவின் கணவரும் ஆவார். மூன்று முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’,...

மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள்...

"இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது!

தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார். "ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே..., அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர்,...

மின்மினிப் பூச்சிக்கு வெளிச்சம் எப்படி வருகிறது?

கிராமத்து வயல்காட்டில் அடர் செடிகள் இரவில் வண்ண ஒளியால் தகதகக்கும். இதில் ஒளிப்பாய்ச்சலுக்கு காரணம் விளக்குப்பூச்சி எனப்படும் மின்மினிப் பூச்சிகளே. இந்த வெளிச்சம் எப்படி உருவாகிறது.பொதுவாக ஒரு பொருள் ஒளி விடும் போது அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒரு மின் விளக்கில் 90 சதவீத வெப்பமும், 10 சதவீத ஒளி மட்டுமே வரும். அப்படி என்றால் இந்த சிறியப்பூச்சி வெந்து கருகிவிடாதா? அப்படி எல்லம் நடப்பது இல்லை.மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர்...

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்!

மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு.உதாரணமாக, சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும், இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன.வெள்ளைநிறப் பூக்கள், கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம் அல்லது மவுனம் ஆகியவற்றையும், பீச் அல்லது பவழ வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம்,...

சென்னைக்கு பக்கத்தில ஒரு மர்மமான இடம்!

பல இடங்கள் நமக்கு பக்கத்திலேயே இருக்கும் ஆனால் மற்றவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியும். தெரியும் போது 'அட' என்று நினைப்போம். அப்படி பட்ட இடம் ஒன்று சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. ஆம், சென்னைக்கு பக்கத்தில…. ஒரு 100 கிலோ மீட்டர்ல…. இருக்கும் ஒரு மர்மமான இடம் பற்றிய தகவலே இது….அப்படியா, என யோசிப்பவருக்கு…. ஒரு கேள்வியுடன் தொடங்குவோமே…உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு அது இருக்கும், கோடி வருசங்களுக்கு மேல…ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது….பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட...

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா - அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே...

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

அதென்ன பதினாறு? நிச்சயம் பதினாறு குழந்தைகளைப் பெறுவதாக இருக்கமுடியாது, பதினாறு வகைச் செல்வங்களை அடைதல் என்பதுதான் சரியான விளக்கம் என்று எல்லாருக்கும் தெரியும்.ஆனால், அந்தப் பதினாறு செல்வங்கள் எவை என்பது தெரியுமா? அப்படியே தெரிந்தாலும், அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?பிரச்னையில்லை, அபிராமி பட்டர் எழுதிய ‘திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்’ என்ற நூலில் அந்தப் பதினாறு செல்வங்களும் ஒரே பாடலில் தரப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்துகொண்டால், அடுத்தமுறை இப்படி வாழ்த்தும்போது அர்த்தம் புரிந்து சொல்லலாம்:கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு...

பூவின் 7 பருவங்கள்!

பூவின் 7 பருவங்கள்• அரும்பும் நிலையில் அரும்பு   • மொக்கு விடும் நிலை மொட்டு • முகிழ்க்கும் நிலை முகை   • மலரும் நிலை மலர் • மலர்ந்த நிலை அலர்   • வாடும் நிலை வீ • வதங்கும் நிலை செம்...

பணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள்...

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல்!

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும். மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.  உங்களின் இரு உள்ளங்கைகளையும்...

பிடிஎப் கோப்புகளை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய எளிய வழி!

முதலில் உருவாக்கப்பட்ட போது அதனை யாரும் எளிதில் எடிட் செய்ய முடியாது. மேலும் இதனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான் செயல் இல்லை என்று இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை அது தலைகீழாக மாறிவிட்டது, பிடிஎப் கோப்புகளை எடிட் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் , கன்வெர்ட் செய்வதற்கும் மென்பொருள் சந்தையில் என்னற்ற மென்பொருளும் இணையத்தில் இலவச வலைமனைகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் Cometdocs. இதில் இரண்டுவிதமான சேவைகளும் உள்ளன. டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் கன்வெர்சன் ஆகியவை.மென்பொருளை தரவிறக்க http://www.cometdocs.com/desktopAppமென்பொருளை...

அசத்தலான ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள்!

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலேயே இளைய நாடு, அதாவது மிகவும் சமீத்தில் உதயமான நாடு எது தெரியுமா? தெற்கு சூடான்!.2001 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.1990 ம் ஆன்டுக்கு பிறகு உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகியிருக்கின்றன. இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஃபேக்ட்மான்ஸ்டர் ( http://www.factmonster.com/) இணையதளம் உங்களுக்கு வழிகாட்டும்.இந்த தளத்தை தகவல் சுரங்கம் என்று சொல்லலாம்.ஆன்லைன் கலைக்களஞ்சியம்...

நெரிசலில் சிக்காது ஆம்புலன்ஸ் - மாணவர் கண்டுபிடிப்பு!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் எளிதாகச் செல்ல தொழில்நுட்பம் ஒன்று பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளதுகண்டுபிடிப்பின் பெயர் : Emergency Traffic Clearing Remote Control kitகண்டுபிடிப்பாளர்களின் பெயர் : லோகேஸ்வரன், விஷ்ணுதாஸ், விகாஷ், ஜவகர்பள்ளியின் பெயர் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காரமடைகண்டுபிடிப்பின் பயன் : ஆம்புலன்ஸ் டிரைவர் தன் கையில் உள்ள ரிமோட்டை பயன்படுத்தி போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிக்னலை மாற்றமுடியும்உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை ஏற்றிச்  செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம், குறிப்பிட்ட...

ரஜினி, விஜய், அஜீத் படங்களுடன் போட்டி: 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது!

ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு போட்டியாக 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாடல்கள் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியாகிறது. விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலையொட்டி ஜனவரி 14–ந்தேதி வருகிறது. தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2' படத்தை ஜனவரி 26–ல் ரிலீஸ்...

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்!

செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.***கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.***ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம் போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?காதலன புடிக்கலன்னு அர்த்தம் பொண்ணு...

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதி!

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், காய்ச்சல் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.டெல்லி ராஜாஜி மார்க்கில் இருக்கிறது அப்துல் கலாம் வீடு. வீட்டில் இருந்த அப்துல் கலாம், உடல்நலம் சரியில்லை எனக் கூறியதை அடுத்து அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : அவருக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.ரத்த அழுத்தம், இதய செயல்பாடுகள் சீராகவே இருப்பதால் வேறு பிரச்சினை ஏதும் இல்லை. அவரை...

பிறப்பிலும் அவசரம் ஆண்களுக்கு!

 பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே உரிய காலத்துக்கு முன் பிறந்து விடுவதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. பிரிட்டனில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 5,700 குழந்தைகள் இதுபோல் உரிய காலத்துக்கு முன் பிறப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.மேலும் இந்த புதிய ஆய்வறிக்கையின் படி உரிய காலத்துக்கு முன் பிறக்கும் குறை பிரசவ குழந்தைகள் நோய்வாய்படுவத்ற்கும் சீக்கிரம் மரணம் அடையவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் பள்ளியில் பேராசிரியர் ஜாய் நடத்திய...

சச்சினுக்கு பாரத ரத்னா விருது!

 கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும்  வேதியியல் விஞ்ஞானி  சி.என்.ஆர்.ராவுக்கும் இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இருவருக்கும் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது குறிப்பிடதக்...

பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்!

பீர் பாட்டில்களில் இந்து கடவுளர்களான விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், லேபிள்களை அகற்றுவதாகவும் கூறியது.இதையடுத்து இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய நிவேதா பகுதி இந்து அமைப்பைச் சேர்ந்த ராஜன் ஸேத் இது சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று...

அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகிறார் இந்தியரான டாக்டர் விவேக் மூர்த்தி!

 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும் குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார். இந்த விவேக் எச். மூர்த்தியை அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் உயரிய பதவியில் ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார். இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்ருக் கொண்டால் அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய...

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத்...

சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னையில் சேல்ஸ்!

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் சர்வதேச ரோமிங் சிம் கார்டை லைகா மொபைல் நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது என்பதுடன் முன் பணம் செலுத்தத் தேவையில்லை என்பதும விசேஷ தகவல்.                ...

வாழை இலையின் பயன்கள்!

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய்...