Sunday, 29 December 2013

தமிழ்த்திரை 2013 நட்சத்திரங்கள் மின்னுவதும்.. மங்குவதும்...

புதிய சிந்தனை, புதிய திரைமொழியோடு திறமையான இயக்குநர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இன்னும் திரைப்படம் இயக்குநரின் ஊடகமாகத்தான் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்பவை, முன்னணி நட்சத்திரங்களின் முதுகில் சவாரி செய்பவையாகவே இருக்கிறன. 2013ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்த்தால், மின்னிய நட்சத்திரங்கள், மின்னுவதுபோலத் தோற்றம் காட்டிய நட்சத்திரங்களின் செல்வாக்கு நிலையை, பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிவரங்கள் புட்டுப்...

"இந்தப் புத்தாண்டு ஆராதனாவுடன்தான்." - உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்

2013-ம் ஆண்டில் டாப் கியரில் பயணித்த ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அந்த வேகத்தை சற்றும் குறைக்காமல் அடுத்த ஆண்டிலும் பயணிக்க தயாராகி வருகிறார். 2014-ல் ரிலீஸாகவுள்ள அவரது முதல் படம் ‘மான் கராத்தே’. இந்தப் படத்துக்காக ஹன்சிகா மோத்வானியுடன் காதல் கராத்தேவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மாமல்லபுரம் சாலையில் சந்தித்தோம்.இந்தப் படத்தில் என்ன கருத்து சொல்ல வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? முதல்லயே இப்படி தொடங்கினா எப்படி நண்பா. நீங்களே...

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?  01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி. 02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி. 03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி. 04. 1835 ல் அவரது காதலி மரணம். 05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது. 06. 1838 ல் தேர்தலில் தோல்வி. 07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி. 08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி. 09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி. 10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி. 11....

பெர்லின் பட விழாவில் நிமிர்ந்து நில்!

ஜெயம்ரவி நடிக்க சமுத்திரகனி டைரக்ட் செய்துள்ள படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அமலாபால் ஹீரோயின். நீ திருந்து உலகம் தானாக தன்னை திருத்திக் கொள்ளும் என்ற மெசேஜை கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. 2013ல் ஆதிபகவன் கொடுத்த அடியில் துவண்டு போயிருக்கும் ஜெயம் ரவி இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நிமிர்ந்துநில் படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது....

வாழ்க்கை கொடுத்த குருவை மறந்த சிஷ்யன்;அடி முட்டாள் என திட்டிய குரு..?

சினிமாவில் ஊர் உலகத்துக்கெல்லாம் கருத்து சொல்லும் காமெடியன், ஹீரோவாக நடித்த எந்தப் படமும் இதுவரை ரிலீசாகவில்லை. இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் ஆடியோ ரிலீஸ் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய காமெடியன், விழாவுக்கு வந்திருந்த ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், பாரதிராஜா, கேயார், விக்ரமன் ஆகியோரை வானளாவ புகழ்ந்து தள்ளிவிட்டு தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர் பற்றி பேச மறந்து விட்டார். பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு...

பாலூட்டும் புறா..?

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில்...

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…மகனின் வளர்ச்சியில் அக்கறைஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.    ஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள்.    எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.    கண்ணீர் விடுவதில்...

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-...!

இங்கல்ல, பிரிட்டனில்  நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் இல்லை!பிச்சையெடுக்கிறார்களே… பாவம்… தெருவோரத்தில் குடியிருப்பார்கள்...

ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ...?

அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ...1. ஆண்கள் போட்ற ட்ரெஸ், பக்கத்துல இருக்குற பெண்களின் கண்ண உறுத்தும்,2. ஆண்களோட வேல பாக்குற பெண்களிடம் பெர்சனலா பேசாதீங்க3. கூட வேல பாக்குற பெண்களிடம் ஐடியா கேட்காதீங்க4. கூட வேல பாக்குற பெண்களிடம் செல் நம்பர் கொடுக்காதீங்க, செல் நம்பர்வாங்காதீங்க5. கூட வேல பாக்குற பெண்களிடம் கை கொடுத்து பேசாதீங்க6. ஒங்க கிட்ட காசு இல்லன்னு கூட வேல பாக்குற பெண்களிடம் சொல்லாதீங்க7. பெண்கள் காம்ப்ளிமென்ட்ஸ்...

AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!

AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது. இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது. இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால் முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்து...

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்..!

வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து...

மூளையைத் தூங்க விடாதீர்கள்...?

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.1. கவனமான பார்வை2. ஆர்வம், அக்கறை3. புதிதாகச் சிந்தித்தல்இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.ஒன்றிலிருந்து...

மின்மினியின் காதல்....?

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இது ஒரு...

அழகாகக் கோபப்படுங்கள்!

பெரும்பாலும் காரணம் இல்லாமல் கோபம் வருவது இல்லை; ஆனால், மிக அரிதாகத்தான் அது நியாயமான காரணத்துக்காக வருகிறது - பெஞ்சமின் ஃபிராங்கிளின் வாரத்தை இது. ஆக, கோபம் என்பது மீண்டும் மீண்டும் ஓர் எதிர்மறை எண்ணமே என்பது தெளிவாகிறது. எண்ணங்கள் இல்லாமல் மனித மனம் கிடையாது. ஆகவே, கோபப்படுங்கள்; ஆனால், அதற்கு ஆட்படாதீர்கள். அதாவது அழகாகக் கோபப்படுங்கள். உளவியல் துறையில் கோபத்தை நிர்வகிக்க (Anger management) பயிற்சி அளிப்பதற்காகவே சிறப்பு வல்லுநர்கள் இருக்கிறர்கள்....

ஆர்யா - விஜய்சேதுபதி கூட்டணியில் ஷியாம்...?

புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதியுடன் இணைகிறார் ஷியாம்.யுடிவி நிறுவனம் தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பது ஏற்கனவே வெளிவந்த தகவல்.புதிதாக அந்த படத்தில், ஆர்யா–விஜய் சேதுபதியுடன் ஷியாம் இணைகிறார்.சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை இது. அவருக்கு உறுதுணையாக இருக்கிறார், இன்னொரு இளைஞர். இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக ஒரு பொலிஸ் அதிகாரி நிற்கிறார்.அந்த பொலிஸ்...

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க....?

சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை.வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம்.துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை.ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவைஇழக்க வேண்டியதில்லை.எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில்ஈடுபடாதீர்கள்.அடிப்படைகளையும்...

கமலுடன் ஜோடி சேர காஜலுக்கு ரூ.2 கோடி...!

உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலுக்கு 2 கோடி ரூபா சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் காஜல் அகர்வால். 2004இல் இந்தி திரைப்படமொன்றில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். 2008ஆம் ஆண்டு வரை அவருக்கு பேசிக்கொள்ளும்படி திரைப்படங்கள் அமையவில்லை. 2009இல் மகதீரா (தமிழில் 'மகாவீரன்') தெலுங்கு திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பெரிய...

கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம்....?

கணவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌சில பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் மனை‌வி‌க்கு‌‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். ஆனா‌ல் பெரு‌ம்பாலான மனை‌விகளு‌க்கு‌, த‌ங்களது கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம் எ‌ன்று ஒ‌ன்று இரு‌க்குமானா‌ல் அது எதுவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று உ‌ங்களா‌ல் க‌ணி‌க்க முடியுமா?தாய்க்குப் பின் தாரம் எ‌‌ன்று ஒரு பழமொ‌ழி உ‌ள்ளது. இதனை ச‌ரியாக உண‌ர்‌ந்தா‌ல் இ‌ந்த தவறு ச‌ரிசெ‌ய்ய‌ப்படு‌ம். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா...

ஷங்கர் படத்தில் நான்!

“ஓகே சார், நான் ரெடி...” என்றார். நானும் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். ஒருவேளை நான் ஜூஸ் குடித்து முடிப்பதற்காகக் காத்திருந்திருப்பாரோ என்று நினைத்தபடி அவசரமாகக் கடைசி மடக்கைக் குடித்துவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு நானும் ரெடி என்றேன். இயக்குனர் ஷங்கரைப் பேட்டி எடுப்பது என்பது எப்போதுமே முக்கியமான விஷயம். பெரும்பாலும் அவர் தரும் ஸ்டில்களும் சொல்லும் தகவல்களும் படு சுவாரஸ்யமாக இருக்கும். முதல் ரசிகனாக நம் பார்வைக்குக் கிடைக்கும் என்பதால் அது எல்லோருக்குமே...

கணவன் வாங்கலையோ..கணவன்....?

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..அது என்னன்னா...!   1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.   இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர்...

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் : ராம் கோபால் வர்மா

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'மை ஒயிஃப் மர்டர்' மற்றும் 'ரான்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. ‘டிராமா குயின்’ என்ற புத்தகம் ஒன்றிணை எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் ராம் கோபால் வர்மாவை தான் திருமணம் செய்ய விரும்பியதையும், ’என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என தான் அவரிடம் கேட்டதாக சுசித்ரா கூறியுள்ளார். அதற்கு...

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக்...

'ஜில்லா'- நடப்பது என்ன?

'ஜில்லா' படத்தின் சென்சார் டிசமபர்.30-ம் தேதி, டிரெய்லர் டிசம்பர் 31-ம் தேதி என முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய், மோகன்லால், காஜல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஜில்லா' படத்தினை நேசன் இயக்கியிருக்கிறார். ஆர்.பி.செளத்ரி தயாரிக்க, இமான் இசையமைத்து இருக்கிறார். பாடல் வெளியீடு முடிந்தாலும், படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் டீஸர் அல்லது டிரெய்லர் என எதுவுமே வெளியிடாமல் இருந்தது படக்குழு. இதனால், படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகுமா...

உதடு ஒட்டாத குறள்(கள்) ....?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன் -341         ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (திரு மு.வ உரை)        எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல். – 489         கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச்...

செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி..?

செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம்.ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. ஆப்பிலின்...

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும். மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது...

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு.அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து...

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்....?

இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக...

தெரியுமா உங்களுக்கு?

1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன. 2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற...

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு....?

ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாரணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆலன் டியூரிங் கண்ணி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர். அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர். ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர் ,...

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி...?

கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் அல்லது கட்டுரைகளை தவற விடும் வாய்ப்பும் இல்லை.இமெயிலில் சந்தாதாரவது சுலபமாகவும் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் இமெயில்ல் வரும் தகவல்கள் சுமையாகவோ , இடைஞ்சலாகவோ மாறிவிடலாம். திடிரென முகவரி பெட்டியில்...