Tuesday, 17 December 2013

ஓர் வரலாற்று அதிசயம்...?

இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றில் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல...மில்லியன் கணக்கான மணித்தியாலங்கள்...

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!

தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.முருங்கைகீரை சூப் செய்யும் முறை:முருங்கைகீரை - 2 கப்வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவுமுதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில்...

சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்!

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”மாளிகை திரும்பிய பெரியவர் தன்...

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" - பழமொழி விளக்கம்!

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"நேர் விளக்கம்நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.அறிந்த விளக்கம் :உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.அறியாத விளக்கம் :இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.இதன் விளக்கம்,நாயகன் = கடவுள்"கல்லைக் கண்டால் நாயகனைக்...

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை....

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கைவாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்வாழ்க்கை...

ஒரு அழகான நாளில்... ?

 கடை தெரு ஒன்றில் கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.அவர் அருகில் ஒரு பலகையில்,"எனக்கு கண் தெரியாது, உதவி செய்யுங்கள் " என்று எழுதி வைத்திருந்தார். இதை பார்த்து அவ்வழியில் செல்வோர் அவருக்கு உதவி செய்தனர்.அவ்வழியில் சென்ற ஒரு நபர் அந்த பலகையில் இருந்த வாசகத்தை அழித்து விட்டு , வேறொரு வாக்கியத்தை அதில் எழுதி விட்டு சென்று விட்டார்.அடுத்த‌ நாள் பிச்சைக்காரருக்கு ஏராளமானோர் உதவி செய்தனர்.பிச்சைக்காரருக்கு மிக்க மகிழ்ச்சி....

புதுமை படைத்தல்?

                                                                                                                                ...

வெற்றி ....?

“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே...

யோகா,யோகா என்று சொல்கிறார்களே, யோகா என்றால் என்ன..?

பதில்:யோகா என்பது உடல் பயிற்சி அல்ல.உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது,மூச்சைப் பிடித்துக் கொள்வது,தலையில் நிற்பது,இவையெல்லாம் யோகா அல்ல.யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.அதாவதுஉடல்,மனம்இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.மற்றும்,யோகா என்றால்,நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்,நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நாம் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும்,நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்,நம்முடைய...

மனைவி பாராட்ட வேண்டுமா?

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவியும் ஒரு பெண் அவருக்கும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடத்து கொள்ள வேண்டும். தினமும் வேலையில் நடக்கும் விஷங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி தான் விட்டு கொடுத்து போக வேண்டும் என்று நினைக்காமல் சில விஷயங்களை மனைவிக்காக விட்டு கொடுத்து பாருங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். • மனைவியைக் கவுரவமாக...

வரலாற்று குறிப்பில் இருந்து...

நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர், அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார். அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார். காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று செய்தியாளர் வியந்து கேட்டார். "அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது....

வெளி நாட்டு வாழ்க்கை....

வெளி நாட்டு வாழ்க்கை....தெரியாத ஊர்...அறியாதமொழி...புதிதான சூழல்...புரியாத சுற்றம்...அனைத்தும் தாண்டி நாம் அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...முதலில் வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம் தகுதியானவர்கள் இல்லை பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும் தகுதியானவர்கள்...இங்கே முடிந்தால் சாப்பிடுவோமே தவிர மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...முடிவெட்டினால் கூட ஒட்ட வெட்டுவோமே தவிர ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...இது எங்களின்...

விபத்தில் துண்டான கையை, காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள் !

சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர்....

உண்மை வரிகள்.....?

உண்மை வரிகள்.....1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது..3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர் எனப் பெயருண்டு..5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.6. மெசேஜ் அனுப்பினா...

குழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது நமக்கு வேண்டுமானால் பிறரிடம் பெருமை அடித்துக்கொள்ளப் பயன் படலாம் ஆனால் குழந்தைகளுக்கு அது தேவை இல்லை.அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ரிமோட் கண்ட்ரோல் காரை விட ஒரு சிறிய பந்து அதைப் பொறுத்தவரை மதிப்பு மிக்கது.கைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண்...

ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? உப்பை வெச்சு துவைங்க....!

நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர். அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர். ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான...

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம்....

காதலுக்கும் , திருமணதிற்கும் உள்ள வித்தியாசம்...

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார். சீடன் சொன்னான்,'குருவே,வயலில்...

கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...

பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager...

அவசியம் தேவை ஐந்து ஊட்டச்சத்துக்கள்...?

 குடும்ப நலனில் அதிக கவனம் உள்ள பெண்கள் கூட இந்த முக்கிய ஐந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உணவில் சேர்த்துக்கொள்ள தவறிவிடுகின்றனர். உணவு தயாரிக்கும்போது இல்லத்தரசிகள் இதை கவனத்தில் கொண்டு உணவு தயாரித்தால் நம் குடும்பத்திற்கும், நம் உடலுக்கும் அத்தியாவசிய நன்மைகளை எளிதில் பெற்றுவிடலாம்.1. வைட்டமின் ஈ வைட்டமின் ஈ சக்திவாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் (antioxidant) இது உயிரணுக்களை (cells) பாதுகாக்கிறது, மேலும் உயிரணுக்களை ஒன்றுக்கொன்று...

சூப்பர் ஸ்டாருடன் மோதத் தயாராகும் பவர் ஸ்டார்?

'லத்திகா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் 'பவர்ஸ்டார்' சீனிவாசன்.அந்தப் படத்தை ஒரே தியேட்டரில் ஓடவைத்து வெள்ளிவிழா கொண்டாடினார்.அதற்குப் பிறகு. 'ஆனந்தத் தொல்லை', 'இந்திர சேனா', 'மூலக்கடை முருகன்', 'தேசிய நெடுஞ்சாலை' என பல படங்களுக்கு ஒரே சமயத்தில் பூஜை போட்டார். அதில். 'ஆனந்தத் தொல்லை' படம் மட்டும் எடுக்கப்பட்டு, ரிலிஸுக்குத் தயாராக உள்ளது. இதற்கிடையில் தான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து பிரபலமானார். பண மோசடி வழக்கில் சிறைக்கு சென்று...

தம்பியைப் புகழும் சிம்பு!

சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில்பாண்டிராஜ் இயக்கும் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 20ல் தொடங்குகிறது.இந்த படப்பிடிப்பில் சிம்புவும், நயன்தாராவும் கலந்துகொண்டு நடிக்கின்றனர்.ஆறேழு வருடங்கள் கழித்து இவர்கள் இரண்டுபேரும் இணைவது உண்மையிலேயே ஒரு புதுவிதமான காம்பினேஷன் தான்.அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.சமீபத்தில் இந்தப்படத்திற்கான முதல் பாடல் கம்போஸிங் நடந்தது. குறளரசன்...

மருந்தாகும் பூண்டு...!

 பூண்டை பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும்.நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுக் கோளாறு நீங்கும்.பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கெண்டால் வாதநோய் கட்டுப்படும்.பூண்டுச் சாறுடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்படும்.பூண்டை...

சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்....

 சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை....

அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க....

காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைவருக்கும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. நமக்குத் தேவையான சத்துக்களை சேமித்து வைக்கும் வங்கிகள் தான் காய்கறிகள். ஆனால், சில காய்கறிகள் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணம் கொண்டவையாக உள்ளன.கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகள் உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? கொழுப்பை குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்புபவர்களுக்கு...

பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் ... அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும்  உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார் ....!!!அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை சமையல் காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான்  அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது...

டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.1. டேப்ளட் பிசியின் அளவு:டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும்,...

தமிழ் இல் type செய்ய...!

http://www.google.com/inputtools/windows/index.htmlஇதனை ஒருமுறை தரவிறக்கி கணினியில் பதிந்துகொண்டால் போதுமானது..பின் எப்போதும் இதனை இயக்க இணைய இணைப்பு அவசியப்படாதுஇதனை நாம் மற்ற எந்த எழுத்து மென்பொருட்களிலும் உபயோகிக்கலாம். (எ-கா) MS Word, Notepad etc.,இந்த மென்பொருளின் அளவு 1 MB –க்கும் குறைவாகும்..இதில் எழுத்துப்பிழை என்பது அறவே வராது..நாம் தவறாக தட்டச்சு செய்தாலும் அதை சரியான வார்த்தையாக மாற்றிகொள்வதே இதன் தனிச்சிறப்பாகும்..கணினியில்...

உபசரிப்பு முறையை தெரிந்து கொள்ள ..

உபசரிப்பு முறையை தெரிந்து கொள்ள ..தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை!!! 1. உப்பு (Salt) 2. ஊறுகாய் (Pickles) 3. சட்னி பொடி (Chutney Powder) 4. பச்சை பயிர் கூட்டு (Green Gram Salad) 5. பருப்பு கூட்டு (Bengal Gram Salad) 6. தேங்கய் சட்னி (Coconut Chutney) 7. பீன்… பல்யா (Fogath) 8. பலாப்பழ உண்டி (Jack Fruit Fogath) 9. சித்ரண்ணம் (Lemon Rice) 10. அப்பளம் (Papad) 11. கொரிப்பு (Crispies) 12....

நம் முன்னோர்களின் ரகசியம்?

டெல்லியில் குதுப்மினார் அருகில் இந்த இரும்பு தூண் உள்ளது.. இதை உலக விஞ்ஞானிகள் ஏன் இன்னும் துருப்பிடிக்கவில்லை என ஆராய்ந்தனர்.. பதில் காண முடியவில்லை.கி.பி.500ல் சந்திரகுப்த மன்னரால் வைக்கப்பட்டது.. இந்த துருப்பிடிக்காத இரும்பு தயாரிப்பதை நாம் கண்டுபிடித்தால் நமது உலகக்கடன்களை எல்லாம் அடைத்துவிடலாம். ஏனெனில் எவர்சில்வர் கொண்டு ராட்சச இயந்திரங்களை தயாரிக்க முடியாது செலவு மிக அதிகமாகும்...முன்னோர்களின்  இந்த ரகசிய கண்டுபிடிப்பை நம் முன்னோர்களே...

‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு!

இந்திய தபால் துறை ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது.மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சிக் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது.இதைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில்...

இந்தியாவும் ஆன்லைன் உளவுதுறையை ஆரம்பிச்சாசில்லே!

உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் “நேத்ரா” – ‘Netra’ – a NEtwork TRaffic Analysis என்னும் ஆன்லைன் உளவுத் துறையை துவக்கி உள்ளது என்ற தகவலை பகிங்கர ரகசியமாக தெரிவித்துக் கொள்கிறேன்..சமீப காலமாக ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் பாதுக்காப்புக்காக ஒட்டு கேட்பது – டேட்டா இன்டர்செப்ட் செய்வது போன்ற பல விஷயங்களை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியா “நேத்ரா” என்னும் ஒரு பிராஜக்ட்ட மூல்ம் India’s Centre for Artificial Intelligence and Robotics (CAIR), Defence Research...

வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட்!

இங்கிலாந்து நாட்டில் முன்னணியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மக்லரென் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் பார்முலா-1 போட்டிகளுக்கான சூப்பர் கார்களைத் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. காரின் முன்புறக்கண்ணாடிகளைத் துடைக்கும் வைப்பர்களுக்குப் பதிலாக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் உள்ளது.இந்தப் புதிய திட்டத்தில் உயர் அதிர்வெண் அலைகள் மூலம் கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படும. இந்த சக்தியைப்...