1.நம்மை அறிந்தோ அறியாமலோ வாழ்வில் எதிரிகள் உருவாகி விடுகின்றார்கள்.நமது கருத்துக்கு முரன்பாடான கருத்துக்களை செயல்களை நம்மை நோக்கி செயல் படுத்துபவர்கள் நேரிடையான எதிரிகள்.நம்முடன் இருந்து கொண்டே குழி பறிப்பவர்கள் மறைமுகமான எதிரிகள்.2.இந்த மறைமுகமான எதிரிகளை நாம் தவிர்க்கவே முடியாது அவர்கள் நமது அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் உறவினர்கள்,நண்பர்கள் ,என்ற போர்வையில் இருப்பார்கள் .நாம் ஒரு அடி முன்னேற எடுத்து வைக்கப் போகின்றோம் என்றால் அதை முளையிலேயே கிள்ளி எரிவதில் வல்லவர்கள். ...