Sunday, 1 September 2013

இனி காலை 8 டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை!

”பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.”என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால்,...

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை வடிவமைக்கிறது கூகுள்

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது.தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.இதற்காக காரில் கமெராக்கள், ரேடார்கள் மற்றும் கணனி...

சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பழங்கள்!

நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான்.மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.கிவிகிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.செர்ரிசெர்ரி...

ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி!

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Hindi Translatorகாலியிடங்கள்: 62 சம்பளம்: ரூ.9,300 – 34,800வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலம் பாடப்பிரிவில்...

புதுப்பிக்கப்படாத பாலிசிகளை அக்டோபருக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்: எல்.ஐ.சி. தகவல்!

கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனறும் பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனவும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்( எல்.ஐ.சி) தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறினார். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 57-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(செப்.1)...

கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் ரஜினி!!

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்த பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச்சிறந்த 25 பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்திலும், அப்துல் கலாம் 3-வது இடத்திலும்,...

பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்!

ஆப்பிள் நிறுவனம் USல் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் டிரேட் இன் புரோகிராம் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் மூலம் ஐபோன் பயன்படுத்துபவர்கள் தங்கள் பழைய ஐபோனை ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை புதிய ஐபோன் வாங்குவதற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை வெளியிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதை பற்றிய அதிகாரபூர்வ...