பழைய வீடுகளை வாங்கும்போது, குடியிருக்கும் வீட்டில் என்ன வில்லங்கம் இருக்கப்போகிறது என நினைத்து கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பழைய வீடு வாங்கும்போதுதான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். முதலில், வாங்கப் போகும் பழைய வீட்டின் மீது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் வீட்டின் பத்திரம், பட்டா, மூலபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுப்பெற வேண்டும். அந்த ஆவணங்களை வக்கீல் மூலம் ஆராய வேண்டும்.பத்திரம் காணாமல் போய்விட்டால், அந்த வீட்டை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், வீடு கட்டுவதற்காக...