
பங்குச் சந்தை முதலீட்டில் சில முக்கியமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டால் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை சட்டெனப் புரிந்து கொள்ள உதவும். எனவே, சில முக்கிய கலைச் சொற்களுக்கான அர்த்தம் இதோ உங்களுக்காக...!முக மதிப்பு (Face Value)ஒரு பங்கின் முகமதிப்பு என்பது பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படும்.புத்தக மதிப்பு (Book Value)கம்பெனியின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து...