குறள் :1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி தாக்காதே தகவல் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.2:காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும் நாணாதே மெல்ல நகும்.பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.3:இனிதே மொழி இயம்பினும் நெடண்மை மெலிதே கொல்லும் செவி.இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை மெலிதே கொல்லும் செவி.பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?4:அன்புசால்...