எப்போது? எப்போது? என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்தது தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார். 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு மட்டுமா, கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் தேசத்தில் அவரது சாதனைகள் ஏமாற்றங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளன.சச்சின் மைதானத்தில்...