
செல்லிஸ் என்று ஒரு இணைய தளம் இருக்கிறது.எல்லோரையும் இ காமர்சிற்கு அழைத்து வரும் இணையதளம் இது.இ காமர்ஸ் என்றால் இனையம் மூலம் பொருட்களை வாங்குவது மட்டும் அல்ல இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதும் தான்.ஆம் இந்த தளம் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை மிகவும் சுலபமாக்கும் நோக்கோத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.அதை அழகாக நிறைவேற்றியும் தருகிறது.இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதென்றால் அதற்கென தனியே இணையதளம் அமைக்க வேண்டும்,அதிலும் பொருட்களை காட்சிபடுத்தும்...