டிவிட்டர் அச்சு இயந்திரம். டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை...