குறைந்தது பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள் பால் வெளியில் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு பூமியியைப் போன்ற ஒரு கிரகம் கண்டறியப்படுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்க ஆய்வு மையமான நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடே வானியலாளர்கள் இதனை கண்டறிந் துள்ளனர். இதில் எமது பால்வெளியிலுள்ள...