Monday, 30 September 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா

பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.”என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் முறையாக தமிழ்நாட்டின்...

வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும்...

பிள்ளையார் சுழி! காரணம்!

எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில் லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் சரி, கடை சாமான் லிஸ்டானாலும் சரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம்.  எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்து தான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த...

தவிட்டு எண்ணெயிலும் வாகனங்கள் ஓட்டலாம்...

கண்டுபிடிப்பின் பெயர் : தவிட்டு எண்ணெய் எரிபொருள்கண்டுபிடிப்பாளர்களின் பெயர் : மகேஷ் ராஜா, ப்ரவீன், வெற்றிவேல், விக்னேஷ்வரன்கல்லூரி : அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருக்குவளைகண்டுபிடிப்பின் பயன் : எரிபொருள் சிக்கனப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறதுஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தவிட்டு எண்ணெயை கலப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் டீசலுடன் கலந்து மாற்று எரிபொருளைக் கண்டறிந்துள்ளனர் திருக்குவளையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள்.தற்சமயம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....

உளவு உலோகப் பட்டாம் பூச்சி..!

எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் உள்ள வான்பயண மின்னணுவியல் (Avionics) ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ‘தக்ஷா‘ என்ற குழுவினர்  ஆட்கள் இல்லாமலேயே பறக்கும் குட்டி விமானம் ஒன்றை  உருவாக்கியுள்ளனர்.பெயரிடப்படாத இந்த ஆளில்லாத குட்டி விமானம், நிலஅளவீடுகள், விண்வெளி, புவியியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது, பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.8 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தை எளிதாக எந்தப் பகுதிக்கும் தூக்கிச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பு. விமானத்தின் அடிப்பாகத்தில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளன.ரிமோட்...

புரட்டாசிப் பட்டம் - என்ன விதைக்கலாம்? எவ்வளவு அறுக்கலாம்?

தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை  சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ...பருத்தி: வெள்ளைத் தங்கம்புரட்டாசிப் பட்டத்திற்கு எல்.ஆர்.ஏ. 5166, கே 11, கே.சி....

மிரட்டும் மெட்ராஸ் ஐ!

கோடை காலம் வந்தாலே உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் வேகமா பரவும். இதுல குறிப்பா மக்கள தாக்குற நோய் மெட்ராஸ் ஐ தான். ஆனா என்னவோ சம்மர் முடிஞ்சு, 3 மாசம் ஆகியும் சிட்டிவாசிகளை இந்த நோய் மிரட்டிட்டு வர்ருது. டெய்லி 15 பேராவது மெட்ராஸ் ஐ அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வர்றதா அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் சொல்றாங்க.மெட்ராஸ் ஐ என்ற நோய் ஒருவித வைரஸ் மூலம் பரவுகிறது. கண்வீக்கம், எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல் மற்றும் சிவப்பாகுதல் போன்றவை இந்த நோயின்...

ஆர்டிஐ( RTI ) பற்றி தெரியுமா?

அரசு துறையின் நடவடிக்கை, செயல்பாடுகளை சாமானிய மக்கள் அறிந்து கொள்ளவது இயலாத காரியமாகவே இருந்து வந்தது. ஆனா இப்போது அப்படியில்லை. அரசின் அனைத்து நடவடிக்கை பற்றியும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலமாக யார் வேண்டுமானாலும் தகவலை கேட்டறியலாம்.மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அறிய இச்சட்டத்தை பயன்படுத்தலாம். ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்துவது...

வசூலிலும் மிரட்டிய ‘தி கான்ஜூரிங்’!

திரைக்கதையில் ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’.  இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது. அந்தவகையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததாக எடுக்கப்பட்டுள்ள ‘தி கான்ஜுரிங்’ ரசிகர்களை மிரட்டி வருகிறது என்றால் மிகையல்ல. தமிழில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன. ஸ்பாட் லைட்...

மீண்டும் டி.டி.எச்.-ஐ கையில் எடுக்கும் கமல் - விஸ்வரூபம்-2வை வெளியிட திட்டம்!!

இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவுக்கு ஒவ்வ‌ொரு முறையும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருபவர்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தவகையில் இந்தாண்டு துவக்கத்தில் கமல் இயக்கி, நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டார். ஆனால் இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனது முடிவை கைவிட்டார்...