Friday, 17 May 2013

பேஸ்புக்கில் இருந்து வரும் E-mail தொல்லைகளை நீக்கலாம்!




 

                பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து ஓபன் செய்து விடுகின்றனர். 


        ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக Hack செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது.





        ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என பார்க்கலாம்.  


  •       முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள். 

  •     உங்களுக்கு வரும் விண்டோவில் Email பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும்.  

  •     அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும்.

  •        இப்பொழுது வரும் விண்டோவில் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 

  •      Save Changes என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.

  •       உங்களின் மின்னஞ்சலை ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய முகவரி பேஸ்புக்கில் சேர்ந்து விடும். 

  •       மறுபடியும் Account Settings — Email — Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை தெரிவு செய்து பேஸ்புக் கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும்.

  •        இப்பொழுது மறுபடியும் அதே Email — Edit பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு அடிக்கு நேராக உள்ள Remove என்ற லிங்க் அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும். இனி நீங்கள் புதிய மின்னஞ்சலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் முகவரியையும் பாதுகாக்கலாம்.

ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்





கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? 


 தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா?
  


       உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது.  




             அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.



             பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.




      பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.





      மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக் கரம் நீட்டுகிறது.






இணைய தளத்திற்குச் செல்ல http://www.learnerstv.com/

Bio-Data தயாரிக்க அருமையான இணையதளம்






    திறமையை தினந்தோறும் வளர்த்துக்கொண்டு மேம்படுத்துகிறோம். வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தெரிவிப்பது எப்படி?  இவற்றைத் தெரிவிக்க அடிப்படையாக, ஒரு முகப்புப் பக்கத்தைபோல (Index page) இருப்பதுதான் பயோடேட்டா (Bio-Data).




    நமது திறமை என்ன ?  தகுதி என்ன?  என்பன போன்றவை தெள்ளத்தெளிவாக நாம் விண்ணணப்பிக்கும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியவையும் இந்த பயோ-டேட்டாஅல்லது  Resume கள்.  பயோ டேட்டாவின் முக்கியத்துவம் வேலை தேடுபவர்களுக்குநன்றாகவே தெரியும்.  நல்ல பயோடேட்டாவை[ச் சார்ந்தே நல்ல வேலை கிடைக்கும் . பக்காவாக , பளிச்சென பயோ டேட்டா இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.




     ஒரு நல்ல பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி?  என்பது தான் பலருக்கும் தெரியாத விஷயம்.  இந்த குழப்பம் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.




     இப்படித்தான்பயோடேட்டா இருக்க வேண்டும் என்ற விதிகள் இல்லை. என்றாலும் ஒரு சிலர் பயோடேட்டா விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்து கொண்டு அதிக பக்கங்களில் பயோடேட்டாவை தயார் செய்கிறார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பலனை தராது. . கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத விஷயங்களை அதில் சேர்க்கக்கூடாது.




     அதேபோல பொய்யான தகவல்கள், கவர்ச்சிகரமான அம்சங்கள் இவைகளை தவிர்த்தல் நலம்.  இதனால் வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவன அதிகாரிகள் எரிச்சலடையாமல் இருப்பார்கள்.




சரி.  இப்படிப்பட்ட  Bio-dataவை எப்படி தயாரிப்பது? இதற்காகவே உள்ளது இத்தளம்.






     செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள இந்த தளம் உதவும். இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பயோடேட்டாவை சுலபமாக, எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும்.




     ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் குழப்பமே உங்களுக்குத் தேவையில்லை.   இத்தளமே அதை கையாண்டுகொள்கிறது.




    கல்வி தகுதி (Educational Qualification),  வேலை தேடுபவரின் நோக்கம் (Aim of Job Seeker), பணி அனுபவம் (Experience)  போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.




     பயோடேட்டாவை உருவாக்குவதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.  இதற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் கீழே இருப்பதைப் போன்று துறைவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.







  • Teacher Resume Samples
  • Nurse Resume Samples
  • Resume Samples for Manager
  • Retail Resume Samples
  • Accounting Resume Samples
  • Engineering Resume Samples
  • Military Resume Samples
  • IT Resume Samples



     உருவாக்கப்படும்  Resume  ஒரு பக்கம் அளவே இருந்தாலும் எளிமையாக, வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் அதிலேயே வந்து விடுகின்ற‌ன.  இந்த தளம் உங்கள் பயோடேட்டாவை சிறப்பாக உருவாக்கி த‌ருபவை. அதை சரியாக நிறைவேற்றுகின்றன.





      இந்த தளத்தின் மூலம் பக்காவான பயோடேட்டாவை சுலபமாக உருவாக்கி கொண்டு விடலாம். 

        நீங்கள் இத்தளத்தின் மூலம் உருவாக்கிய பயோடேட்டாவை  Printசெய்துகொள்ளலாம்.  PDF  கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.  வேலைக்குஇணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ‌

   



      அதே சமயம் உங்கள் ப‌யோடேட்டாக்கள் வேலை தரும் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை பெறுவதற்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்குகிறது.  நமது தகுதிக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இத்தளத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.




        உங்கள் பயோ டேட்டாவை உருவாக்க நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://www.resumebaking.com/




குறிப்பு: 


       இத்தளத்தில் சென்று உங்கள் இ-மெயில் , மற்றும் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்ட் கொடுத்து உங்களுக்காக கணக்கொன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். பிறகு தோன்றும் விண்டோவில் கேட்கும் விவரங்களை கொடுத்து தொடருங்கள். இது இலவச சேவையில்லை. குறைந்த பட்ச கட்டணத்தை வசூலித்துக்கொண்டு சேவையை தருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.



இதிலிருக்கும்  Resume tips கள் அனைத்தையும் படிக்க  இந்த இணைப்பில்  செல்லவும்.