Monday, 27 May 2013

5 G தகவல் பாதை - புது தகவல்!






                   இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 




                       இந்த தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் 2020 ஆம் ஆண்டில் இதனை வழங்க முடியும் எனவும் சாம்சங் தெரிவித்துள்ளது. 









                     


                       இந்த அலைக்கற்றை கட்டமைப்பு மில்லிமீட்டர் அலைவரிசையைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளதாகவும், தற்போது 4ஜி அலைவரிசையில், வெகு தூரத்திற்கு தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை இது தீர்த்துவிடும் என்று கூறுகிறது. 




                      இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், இது 28 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கி, நொடிக்கு 1.056 கிகா பிட்ஸ் தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டதாகத் தற்போது அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.





                    எனவே, தற்போதுள்ள 4ஜி வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகத்தில் தகவல்களை 5ஜி அலைவரிசைக் கட்டமைப்பில் அனுப்ப முடியும். 

  


                 இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் இன்னும் 4ஜி அலைவரிசையே வர்த்தக ரீதியாக மக்களிடம் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு கம்ப்யூட்டரின் விலை ரூ. 3.5 கோடி - ஆப்பிள்!!!








                ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ஒரு கம்ப்யூட்டர், 3.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.



                  1976-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக தயாரித்த 200 கம்ப்யூட்டர்களில் இதுவும் ஒன்று என்பதுதான் இந்த அதிக விலைக்கு காரணம். 



                          எனினும், இந்த 200 கம்ப்யூட்டர்களில் வேலை செய்யும் நிலையில் உள்ளவை 6 மட்டுமே. அதில் ஒன்றுதான் மூ்ன்றரை கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது.










                         ஜெர்மனியைச சேர்ந்த ப்ரெகர் (Breker) என்ற நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர் இந்த கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்.




                     ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்சுடன் இணைந்து தொடங்கிய வாஸ்னியாக் (Wozniak) இதில் கையெழுத்திட்டுள்ளார் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 









                   இதுபோன்ற பழமையான ஒரு ஆப்பிள் கம்ப்யூட்டர் கடந்தாண்டு 3 கோடி ரூபாய்க்கு விலை போனது.

பேஸ்புக்கில் கமெண்ட் எழுதும் வைரஸ்.... எச்சரிக்கை!









                சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.  




                  நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.








                      இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 




                    குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது. 





                        இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.







                         இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை அப்டேட் செய்து கொண்டு செயல்படுகிறது. 



                      மைக்ரோசாப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது. 




                       தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



               இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்து அமைக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.