Wednesday, 29 May 2013

இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை - 'ரோபோ' ஜெல்லி மீன்`










                கடல் கண்காணிப்பு பணியில் 'ரோபா' ஜெல்லி மீனை ஈடுபடுத்தி இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

 



              அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஷசாங் பிரியா. பிளாக்ஸ்பர்கை சேர்ந்த இவர் விர்ஷினியா தொழில் நுட்ப கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் பேராசிரியராக பணிபுரிகிறார்.







             இவர் தலைமையிலான குழுவினர் ரோபோ எந்திர ஜெல்லி மீன் தயாரித்துள்ளனர். 5 அடி 7 இஞ்ச் நீளமும், 170 பவுண்ட் எடையும் கொண்டது. இதற்கு சைரோ என பெயரிட்டுள்ளனர்.

 






               எந்திரத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஜெல்லி மீன் தானாக சுதந்திரமாக இயங்க கூடியது. இதன் மூலம் கடல் பகுதியை மிகவும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இது உளவாளியாக செயல்படுவதால் கடலுக்குள் புதிதாக நுழைபவர்கள் பற்றியும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை, கடல் மட்டத்தின் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.



மொழிகள் தொடர்பான தகவல்கள் - உங்களுக்கு!








                  உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன. 

 

               உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்
.





                  உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி. 




                உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும். 




                 உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. 





                 ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.


 



ராஜ ராஜா உனக்கே வெளிச்சம் !!!




Facebook Share Image - 12









       ஆயிரம் வருடங்களுக்கு முன்னே இப்படித்தானே கட்டி இருப்பார்கள் இதை !



     எத்தனை யானைகள் களத்தில் வேலை செய்திருக்கும் ! 



   இந்த யானைகளை எத்தனை வருடம் பழக்கி இருப்பார்கள் ! 



       எத்தனை மனிதர்கள் வேலை செய்திருப்பார்கள் ! 



       எத்தனை சிற்பிகள் இவற்றை செதுக்கி இருப்பார்கள் !



     மலைகளே இல்லாத தஞ்சையில், இவ்வளவு டன் பாறைகளை எப்படி கொண்டு    வந்திருப்பார்கள் ! 



            இவர்களை யார் கண்காணித்திருப்பார்கள் ! 



    நினைக்கும் போதே தலை சுற்றுகிறதே ! 



ராஜ ராஜா உனக்கே வெளிச்சம் !