Thursday, 30 May 2013

2050-ல் இந்திய அரசைக் கைப்பற்ற மாவோயிஸ்டுகள் திட்டம்?








                   2050ஆம் ஆண்டில் இந்திய 

அரசை கைப்பற்றுவது என்பதுதான் 

மாவோயிஸ்டுகளின் நீண்டகால 

திட்டம் என்று முன்னாள் உள்துறை 

செயலர் ஜி.கே. பிள்ளை  

தெரிவித்துள்ளார். 



               சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பெருந்தாக்குதல் நாட்டை அதிர வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையை சத்தீஸ்கர் மாநிலத்தில் இறக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மாவோயிஸ்டுகள் இலக்கு வைத்து தொடங்கியிருக்கும் வேட்டை எங்கே போய் முடிகிறதோ தெரியவில்லை.



                  இது தொடர்பாக ஆங்கில நாளேட்டுக்கு முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை அளித்துள்ள பேட்டியில், இந்திய மத்திய அரசை உடனடியாக தூக்கி எறிந்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது மாவோயிஸ்டுகள் திட்டம் அல்ல.. அது அவர்களது கனவு. ஜனநாயகத்தை சீர்குலைப்பது என்பது அவர்களது நீண்டகால செயல்திட்டம். 





                2050ஆம் ஆண்டு இந்திய அரசைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம். மாவோயிஸ்டுகளின் உள்வட்ட ஆவணங்களில் இத்திட்டம் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நிச்சயமாக முறியடிக்கும்.
 



                 தூக்கி எறியப்பட்ட மாவோயிஸ தத்துவம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறைவாக இருக்கிறது. மக்கள் நலக் கொள்கைகள் என்ற அடிப்படையில் அப்பாவி மக்களை தம்வசப்படுத்துகின்றனர் மாவோயிஸ்டுகள். ஆனால் அது போலியானது. சீனா உள்ளிட்ட கம்யூனிச நாடுகளிலேயே மாவோயிஸ தத்துவம் தூக்கி எறியப்பட்டுவிட்டது.


                 ஆண்டுக்கு ரூ1200 கோடி வசூல் மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு ரூ1200 கோடியை சுரங்க நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். தொலைதூர இடங்களுக்கான போக்குவரத்துகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்கினால் அவர்கள் நிச்சயம் பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவர்.



                  45 ஆயிரம் போலீசார் தான்.. 


              டெல்லியைவிட 5 மடங்கு பெரிய பிரதேசம் பஸ்தார் பிரதேசம் மட்டும். டெல்லியிலோ 95ஆயிரம் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கே 45 ஆயிரம் போலீசார்தான்..

Android சாதனத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்!!!



 ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருள் இது!








 உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? 



இதனை நிவர்த்தி செய்ய எண்ணுகிறீர்களா?



 அப்படி எனில் உங்கள் Android சாதனத்தில் இருக்க வேண்டியது Battery Doctor ஆகும்.



 இது உங்கள்  Android சாதனத்திலிருந்து வீணே செலவாகும் சக்தியை சேமித்து நீண்ட நேர உழைப்பை பெற்றுத்தர பெரிதும் உதவுகின்றது. இது 30 மில்லியன் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ள முற்றிலும் இலவசமான மென்பொருளாகும்.


மொபைல் battery doctor


இது உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க என்ன தான் செய்கின்றது ?




 

  இதனை ஒருமுறை இதனை Click செய்வதன் மூலம் உங்களது Android சாதனத்தின் சக்தியை சேமிக்க முடியும். (One-tap power saving)


    Android சாதனம் இன்னும் எவ்வளவு நேரம் இயக்கத்தில் இருக்குமென்பதனை துல்லியமாக காட்டுகின்றது.


    உங்களது Android சாதனத்தில் குறிப்பிட்டஒரு செயல்பாடு இயக்கப்படுவதன் காரணமாக எவ்வளவு நேர சக்தி வீண் விரயமாகின்றது என்பதுடன் அதனை முடக்குவதன் மூலம் எவ்வளவு நேர சக்தியை சேமிக்கலாம் என்பதனையும் கணக்குப்போட்டு காட்டுகின்றது.







    உங்கள் Android சாதனத்தின் சக்தியை எவ்வாறு சேமிக்கலாம் என்று ஆலோசனை வழங்குவதுடன். தேவைக்கேற்ற விதத்தில் சில வசதிகளை செயற்படுத்தியும் தேவையற்ற வசதிகளை முடக்கியும் பயன்படுத்த உதவுகின்றது.


    அமைதியாக Battery இன்  சக்தியை வீண் விரயம் செய்யும் மென்பொருள்களை கட்டுப்படுத்துகின்றது.(Task Killer)


    Battery இன்  சக்தியை அதிகம் எடுத்துக்கொள்ளும் மென்பொருள்களை பட்டியல் போட்டு காட்டுகின்றது.

    குறிப்பிட்ட ஒரு நேரத்தில் Battery இன்  சக்தியை சேமிக்கும் வசதியை தருகின்றது. (Pre-made saving mode along with schedule feature)



மேலும் பல வசதிகளுடன் கட்டண மென்பொருளுக்கு ஈடான வசதிகளை வழங்கும் இந்த முற்றிலும் இலவசமான மென்பொருளை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்.
  




                                                                                               நன்றி! தகவல்தொழில்நுட்பம்

இந்தியாவின் உதவியுடன் எங்களை வளைக்கிறது ஜப்பான்!!!







          இந்தியாவின் உதவியுடன் சீனாவை சுற்றி வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்று சீன தினசரி செய்தி வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது.




              இந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி வெளியிட்டு வீம்பு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.




             இதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற அந்த இதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மன்மோகன் சிங்கின் 3 நாள் ஜப்பான் பயணம் இரு நாட்டு கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தையை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்றே தோன்றுகிறது. சிங் வருகைக்கு முன்பு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. 




               சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சியே இது. சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தன் பக்கம் இழுத்து சீனாவுக்கு நெருக்கடி தர ஜப்பான் முயலுகிறது. ஆனால் இது நிச்சயம் நிறைவேறாது. அப்படிப்பட்ட நினைப்பு காணல் நீராகவே போகும். ஆசியாவில் சீனாவின் தாக்கத்தை தகர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நாடு அல்ல ஜப்பான் என்று அந்த தலையங்கம் கூறுகிறது.