Tuesday, 27 August 2013

My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...

My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...

உங்கள் கணினியில் My documents போல்டர் வழக்கம் போல "C" டிரைவில்
தான் அமைந்து இருக்கும். நண்பர்கள் எல்லோரும் தங்களது கோப்புகளையோ அல்லது வேறு ஏதேனும் பைல்களை சேமிக்கும் போது அவை எப்போதும்
My documents போல்டரில் தான் சேமிக்கப்படும். நண்பர்களும் ஏதேனும் அவசரத்தில் சேமித்து விடுவார்கள். அதுவும் நல்லது தான். ஏன் என்றால் நமது பர்சனல் கோப்புகள் ஓரிடத்தில் தான் சேமித்து வைக்க விரும்புவோம். இதனால் ஒன்றும் தீமையும் இல்லை.

ஆனால் எதாவது ஒரு நேரம் , உங்கள் கணினியை Format செய்யும் போது உங்கள் My documents இல் உள்ள கோப்புகள் மீட்டு எடுக்க முடியாமல் போய் விடலாம்.
அல்லது வைரஸ் ஏதேனும் உங்கள் கணினியை செயல் இழக்க செய்து விட்டால்
அந்த நேரத்தில் "C" டிரைவை மீட்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாக இருக்கும். அதனால் My documents போல்டரை அப்படியே உங்கள் கணினியில் வேறு டிரைவிற்கு மாற்றி விட்டால் இந்த பிரச்சனை வராது அல்லவா?

1. டெஸ்க் டாப்பில் உள்ள My documents போல்டரை வலது கிளிக் செய்து அதில்
properties என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. Target என்ற இடத்தில் தற்போதைய My documents இன் முகவரி இருக்கும். நீங்கள் கீழே உள்ள Move என்ற பட்டனை கிளிக் செய்து புதிய முகவரியை
கொடுக்கலாம்.

3. உதாரணமாக நீங்கள் "C" டிரைவில் இருந்து "D" டிரைவிற்கு மாற்றுவதாய் இருந்தால் Target பிரிவில் இப்படி அடிக்க வேண்டும்.

D:\My documents

4. பின்னர் Apply கொடுத்தால் உங்கள் My documents கோப்புகள் எல்லாம் நீங்கள் விரும்பிய டிரைவிற்கு மாறி விடும்.இதற்கு பிறகு Format செய்ய வேண்டி வந்தாலும் உங்கள் My documents கோப்புகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.நன்றி! 
 

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்


இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த
முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்
Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.
வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த
மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

R-Linux Recovery



இதன் தரவிறக்க சுட்டி : RLinux

இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.

இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
கோப்புகளை மீட்கலாம்.

இது போல மற்ற இலவச மென்பொருள்கள் :

Pandora Recovery
Recover Files 2.1
PC Inspector File Recovery 4
Data Recovery 2.3.1
EASEUS Deleted File Recovery 2.1.1
Glary Undelete 1.3
 
 
 

Youtube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்!


 
 
                முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்து பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான கூகிள் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். யூடியுபில் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன. இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)

 
 
பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் யுடியூபில் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் குறித்தான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
 

 
 
பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம். மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் யூடியுபின் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.