Friday, 13 September 2013

ஸ்ரீசாந்த்-அங்கீத் சவானுக்கு வாழ்நாள் தடை: பி.சி.சி.ஐ. நடவடிக்கை



ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்மீத் சீங் மீதான வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது என்று பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SEP 13 - CRIKST Sreesanth_and_Ajit_Chandila

 



ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் மூவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார்.


இந்த அறிக்கையை பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு நியமிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர்களான அருண் ஜெட்லி, நிரஞ்சன்ஷா ஆகியோர் கொண்ட இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 4 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது. 


சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா மற்றும் அமித் சிங் ஆகியோர் உள்ளிட்ட வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை மற்றும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்த ஒழுங்கு நடவடிக்கை குழு, 4 வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தது.இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்மீத் சீங் மீதான வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.

BCCI bans Sreesanth, Chavan for life

****************************************


 Cracking the whip on corrupt players, the BCCI on Friday slapped life bans on Indian Test pacer S Sreesanth and spinner Ankeet Chavan for being involved in the IPL spot-fixing scam while handing out lesser punishments to some others in the scandal which rocked the Twenty20 league this year.

'யானையும்...குறும்பும்..'.........குட்டிக்கதை



ஒரு ஊரில் யானை ஒன்று இருந்தது.அது தினந்தோறும்...அந்த ஊர் கடைத்தெரு வழியாக ஆற்றில் குளிக்கச் செல்லும்.

குளித்து முடித்து திரும்புகையில் கடைத்தெருவில் உள்ள கடைக்காரர்கள் யானைக்கு தின்பதற்கு ஏதேனும் தருவார்கள்.தன் துதிக்கையில் வாங்கி அது உண்ணும்.

அந்தக் கடைத்தெருவில் இருந்த ஒரு தையல்கடையின் தையல்காரர் தினமும் யானைக்கு வாழைப்பழம் தருவார்.

ஒரு நாள் அதனிடம் குறும்பு செய்ய எண்ணிய அவர் அது பழத்திற்கு வந்த போது ..அதன் துதிக்கையில் பழம் தராமல் ஊசியால் குத்தினார்.

யானை...கோபத்துடன் சென்று விட்டது.

அடுத்த நாள் குளிக்க சென்ற யானை..குளித்து முடித்ததும் தும்பிக்கையில் சேற்று நீரை நிரப்பிக் கொண்டு வந்து ...தையல் கடையில் நின்று கொண்டிருந்த தையல்காரர் மீது பீச்சியடித்தது.

தையல்காரர்..தைப்பதற்கு வாங்கி வைத்திருந்த புதுத் துணிகளும் சேறாயின..

தன் குறும்புச் செயல் இவ்வளவு பெரிய தண்டனையை அளித்ததுக் கண்டு தையல்காரர் மனம் வருந்தினார்.

குறும்பு செய்யும் பழக்கம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் உண்டு...

ஆனால் அக்குறும்பு பிறருக்கு மன வருத்தத்தையோ,காயத்தையோ ஏற்படுத்தக்கூடாது.

என்னால் கமல் வளர்ந்தானா, அவனால் நான் வளர்ந்தேனா - பாலச்சந்தர் பரபரப்பு பேட்டி!



38 வருடத்தி்ற்கு முன்பு வெளிவந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தற்போது டிஜிட்டல் முறைப்படி நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடப்போகிறார்கள் ராஜ் டி.வி. குடும்பத்தினர். அதுகுறித்து இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:

இது அற்புதமான விழா. சீன் சீனா நினைத்துப் பார்க்கும்போது இந்த படத்திற்கு ‘நினைத்தாலே இனிக்கும் ’ என்று எப்படி பெயர்வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒரு பாயின்ட் சொல்லி ஒரு இசைக்குழுவினர் பற்றிய கதை என்று முடிவுசெய்து, டிஸ்கஸ் செய்தோம். 32 நாட்கள் சிங்கப்பூரில் ஷுட் செய்தோம். அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆனால் படம் பார்த்தபோது  பட்ட கஷ்டம் மறைந்துபோயிற்று. 38 வருடம் கழித்து இந்தபடம் இப்போது மீண்டும் வெளியிடப்போகிறார்கள் என்றபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நான் கமலிடம் அவனுக்கும் எனக்குமான உறவுபற்றி ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்துகொள்‌ள விரும்புகிறேன். ‘அவனால் நான் வளர்ந்தேனா அல்லது என்னால் அவன் வளர்ந்தானா’ என்பதுதான்.  முதலில் என்னால் கமல் வளர்ந்தான். அடுத்த 20 ஆண்டுகளில் அவனால் நான் வளர்ந்தேன். அவனின் ஆர்வம், என் படங்களில் போட்டி போட்டு நடிக்கிற விதம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அதிசயமானவர் கமல். சினிமாவில் என்னென்ன வரப்போகுது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கமல் அப்பவே எனக்கு நிறைய டெக்னாலஜி பற்றி சொல்லுவான். எனக்கு படிக்க நேரம் கிடையாது. ஆனால் கமலுக்கு படிக்கிறதே நேரமா இருந்துச்சு அப்போ. இந்த நேரத்தில் நான் ரஜினியை ரொம்ப மிஸ் பண்றேன்.

மரோசரித்ரா என்று டென்ஷனான ஒரு படம் எடுத்தேன். அப்போது எனக்கு புல்லா ரிலாக்ஸ் தேவைப்பட்டது. அடுத்து சீரியசா படம் பண்ண நான் தாங்குவேனா என்று தெரியவில்லை. அதனால் கமலிடம் நார்மலா ஒரு படம் பண்ணனும் என்று சொல்லி டிஸ்கஸ் செய்து படம் எடுத்தேன். அதில் கமல் நடித்தார். படம் முடிந்தபின் முதல் காப்பியின் முதல் பாதியை நானும் கமலும் பார்த்தோம். பிறகு சைலன்டாக வெளியில் வந்துவிட்டோம். படத்தைப்பற்றி எதுவும் பேசவில்லை.லிப்டில் வந்தபோது கமலுக்கு அவர் நண்பரிடமிருந்து போன் வந்தது. அவர் படம் எப்படி வந்திருக்கு என்று கேட்டதற்கு, படத்தில் ஜெயப்பிரதா எப்படி தலையை ஆட்டுவாரோ அப்படி கமல் தலையை ஆட்டினான். அதை நான் பார்த்தேன். அப்போது கமலுக்கு அந்த படம் பிடித்ததா இல்‌லையா என்று தெரியவில்லை. அப்போ கமலுக்கு கதை பத்தவில்லை. அவன் அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிட்டான். இப்போது அந்த படம் ரிலீசாறத பார்க்கிறப்போ நான்தாண்டா ஜெயித்திருக்கிறேன்’ என்றார்.