Monday, 25 November 2013

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் – இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் – உண்மையில் நடந்தது என்ன?

nov 25 - nethaji

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்திருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு ஏன் கூறவில்லை? இதன் கோப்புகளை பற்றி அரசு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மவுனம் சாதிப்பது ஏன்? இதனை பற்றி ஜனாதிபதி மாளிகையின் வட்டாரத்தில் விசாரித்தால் இந்த கோப்புகள் வெளியானால் இந்தியாவின் நட்புறவு பல நாடுகளை பாதிக்கும் என சில குற்றச்சாட்டுகாளை முன் வைக்கின்றனர் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பற்றி.

அதில் முதல் குற்றச்சாட்டு இந்தியாவுக்கு எதிராய் சதி செய்தார் நேதாஜி – ஜப்பான் இரண்டாம் உலகப்போரின் போது நார்த் ஈஸ்ட் ஃப்ரிரன்டியரில் பல இடங்களை போரிட்டு பிரிட்டிஷ் ஆர்மியிடம் இருந்து கைப்பற்றிய போது அதில் பலர் சுபாஷுடன் சேர்ந்து “இந்தியன் நேஷனல் ஆர்மி” என்ற தனி இயக்கத்தை சுபாஷ் ஜப்பானுடன் சேர்ந்து செய்தார் என்பது ஒன்று.

இரண்டு -1941 ஆம் ஆண்டு சுபாஷை கைது செய்ய நினைத்த பிரிட்டிஷ் ஆர்மி படை அவரை வீட்டு காவலில் கொல்கத்தாவில் வைத்திருந்த போது அவர் அப்போது அங்கிருந்து வெளியாகி யாருக்கும் தெரியாமல் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரிடம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க உதவி கோரினார். இதன் பிறகு அங்கிருந்து டோக்யோவுக்கு சென்று ஜப்பான் அரசின ஆதரவோடு இந்தியன் நேஷனல் ஆர்மியை உருவாக்கியதாகவும், அங்கு பல பயிற்ச்சிக்கு பிறகு அங்கிருந்து போர்ப்படைகளை திரட்டி தரை மார்க்கமாக மியான்மார்(பர்மா) வழியாக வரும்போது நார்த் ஈஸ்ட்டில் ஒரு முக்கிய இடத்தை கைப்பற்றிய இடம் தான் தற்ப்போதய மணிப்பூர்.

பின்பு அங்கிருந்தபடியே தன் இந்தியன் நேஷனல் ஆர்மியை வளப்படுத்திய சமயம் 1945 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ரகசியமாக கவுன்ட்டர் அட்டாக்கை கொடுத்த போது தான் நேதாஜி டைஹோக்கு விமான நிலையம் வழியாக தப்பித்தார் என்பதே கடைசி வரை உறுதியான தகவல். அதன் பிறகு எல்லாமே மர்ம்மா போச்சி.

இந்நிலையில் சிலர் அவர் விமான விபத்தில் இறந்ததாகவும், சிலர் அவரி புத்த பிட்சுவாக இந்தியாவுக்கு ஊடுருவினார் என்றும் சிலர் சைபீரியாவில் அரசியல் கைதியாக இருந்தார் என்று பல தகவல்கள் வந்தாலும் உறுதியான தகவல் ஏதும் இன்று வரை இல்லை.

இந்தியாவில் சுதந்திரம் அடைந்த பிறகு பல விசாரனை கமிஷன்கள் வைத்து அவரை பற்றி உளவு செய்தும் பார்த்தும் இன்று வரை சரியான தகவல்கள் ஏதும் இல்லை. இந்தியாவுக்கு எதிராய் ஹிட்லரிடம் கை கோர்த்த பல பயிற்ச்சி படங்கள் அந்த கோப்புகளில் உள்ளது என்றும் இந்தியாவிலும் ஹிட்லர் படை இருந்ததாகவும் பல விஷயங்கள் இன்று உலக நாடுகளுக்கு சலாம் போடும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பாதிக்கபடும் என அந்த பைல்களை கிளாஸ்ஃபைடு ஆக்கி அதை ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் ஆட்களும் பாதுகாப்பாய் ரகசியம் காத்து வருகின்றனராம்.

இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

ஐ ஆர் சி டி சி – இந்தியன் ரயில்வேயில் டிக்கட் புக் பண்ணி சக்ஸசாய் வெளி வருவதென்பது எட்டாவது அதிசயம் என எல்லோரும் சொல்ல கேட்போம். இத்தனைக்கும் பல கோடி மெம்பர் உள்ள ஃபேஸ்புக் வேலை செய்யுது ஆனா சில கோடி பேர் மட்டுமே வந்து போற இந்தியன் ரயில்வே சைட் மட்டும் அடிக்கடி சங்கு சக்கரம் மாதிரி சுத்தி கடைசில பனால் ஆயி டைமும் வேஸ்ட் டிக்கட்டும் கிடைக்கலனு குறைபட்டதை அவங்க ஆராய்ந்த போது தான் தெரிந்தது அவர்களின் தவறு!

nov 25 - ravi rail
அதாவது டிக்கட் அலாகேட் பண்ணின பிறகு பேமென்ட்டுக்கு கடைசில தேர்ட் பார்ட்டி பேமென்ட் கேட் வே மூலம் ஒவ்வொரு வங்கிக்குள் சென்று பே மென்ட் பெற்று அந்த டோக்கனை ரயில்வேக்கு கொண்டு சேர்ப்பதில் தான் இந்த லேட் பிரச்சினை, அதிக அளவில் வரும் பேமென்ட் ரெக்வெஸ்ட் டோக்கன்ஸ் / சென்யூரிட்டி இஷ்யு மற்றும் எஸ் எ எல்லில் உள்ள குளறு படிகளால் தான் பல டிக்கட் கடைசியில் ஃபெயில் ஆகிறது என கண்டுபிடித்து “ஈ வாலட்” என்னும் ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடிக்க போறாங்கன்னு சொல்லிடகிடடிருந்தேன். அது என்ன?

உங்களுக்கு பேன் கார்ட்டு இருந்தா ஈ வாலட்டில் ஒரு தொகையை வரவு வைத்து கொண்டு டிக்கட் வேணும் போது அந்த வாலட்டில் இருந்து பணத்தை செலுத்தலாம். இது இந்தியன் ரயில்வே போர்ட்டலுக்குள் இருப்பதால் உடனடியாக டிக்கட் அலாட் செய்து உங்களுக்கு வழக்கமாய் ஆகும் நேரத்தில் நான்கில் ஒரு பங்குதான் ஆகிறதாம் அதே மாதிரி கேன்சல் செய்தால் மறு நாள் உங்க அக்கவுன்ட்டில் பணம் வந்திரும். இதை 4000 பேர் டெஸ்ட் பண்ணியதில் ஒருவருக்கு கூட டிக்கட் ஃபெயில் ஆகலையாம். அப்புறம் என்ன! கலக்குங்க…….என்ன ஒன்னு நம்ம பணத்தை இங்க முடக்கனும், ஆனா அடிக்கடி ஊர் போறவங்களுக்கு இது டபுள் ஒகே.!

ஸ்போர்ட்ஸை பார்த்தாலே போதும்-’பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆய்வு முடிவு!

பொதுவாக ‘பிட்னஸ்’ என்பதை முழு நலம் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய முழு நலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப் படுகிறது.இது போன்ற ‘பிட்னஸ்’ஆக வேண்டுமெனில் ஓட்டப்பந்தயம், நீசசல் போட்டி அல்லது பழுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டுமென்ற சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும்போதே பார்ப்பவரின் இதயத்துடிப்பு விகிதம், சுவாசம், ரத்த ஓட்டம் மற்றும் வெளியேறும் வியர்வையின் அளவு உள்ளிட்டவைகள் அதிகரித்து அவர்களை ‘பிட்’ஆக்குகிறது என்று ஒரு ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.

nov 25 - health sports

அண்மையில் இன்டர்நேஷனல் ஜர்னல் பிரான்டியர்ஸ் இன் அட்டானமிக் நியூரோசயின்சில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு தொடர்பான தகவல் அறிக்கையில்,”கடின உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, ஒருவர் பார்க்கும்போது, அவரது தசை நரம்பின் இயங்கு நடவடிக்கை அதிகமாவதை முதலில் உறுதி செய்யப்பட்டது. நம் உடலில் அரிதாக ஏற்படும் உடலளவில் மற்றும் மன ரீதியான அளவில் ஏற்படும் மாறுபாட்டை கண்டறிவதற்கான சிறந்த கருவியாக தசை நரம்பின் இந்த அதீத செயல்பாடு காணப்பட்டது.

இதற்கிடையில் கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் போது ஏற்படும் இதயத்துடிப்பு அதிகரிப்பு, வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரித்தல், ரத்த குழாய்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள், இந்த தசை நரம்புகளின் அதீத இயங்குதிறனால் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.

இதையொட்டி நடந்த ஆய்விற்கு 9 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் உடலின் வெளிநரம்புகளில் கூரிய ஊசிகள் செலுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

முதலில், அவர்கள் சாதாரணமாக இருக்கும் நிலையில் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ அவர்கள் முன் ஒளிபரப்பப்பட்டது. பின் அவர்களது ரத்த குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் பதிவான மின்னணு மாற்றங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஏற்படும் மின்னணு மாற்றங்களை ஒத்த அளவில் இருந்தது கண்டறியப்பட்டது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.