Friday, 24 May 2013

இனி டச் க்கு நோ! வந்துவிட்டது சென்சார் மொபைல்








                 மொபைல் போனிலுள்ள தொடுதிரையையே தொடவே சோம்பெறித்தனம் வந்து விட்டது நமக்கு எனலாம்.
             இனி நாம் டச் ஸ்கிரினை தொடக் கூட தேவையில்லை.அதற்காகவே தற்போது புதிதாக ஒரு மொபைலை வடிவமைத்துள்ளார் கோவா கல்லூரி மாணவி ஒருவர். 
            ஆண்ட்ரியா கோலகா என்பது இவர் பெயர்,இவர் வடிவமைத்த மொபைல் போன் நம் தொட்டு பயன்படுத்த தேவையில்லை நம் சைகையிலேயே மொபைல் செயல்படும். 
           அத்தகைய புது சென்சார் ஒன்றை வடிவமைத்திருக்கிறார் இந்த மாணவி.
          இவர் MIT யுனிவர்சிட்டியில் பயின்று வரும் மாணவி, இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு 50 இலட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

           இதன் மூலம் மொபைல் போன்களின் அடுத்த கட்டத்திற்க்கு இவர் அடித்தளமிட்டுள்ளார்.
இதோ ஆண்ட்ரியா வடிவமைத்த மொபைல் போனின் புகைப்படங்கள்............











இனி நீங்களும் தலைவர்தான்!!!!








              காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள், பிரபலங்கள் போன்றவர்களது படங்களைத்தானே அஞ்சல்தலையில் பார்த்திருப்பீர்கள். இனி நீங்கள், உங்கள் முகத்தையும் பார்க்கலாம். அதிகம் செலவாகாது. வெறும் முந்நூறு ரூபாய்தான்!



                   இங்கே உள்ள உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரான்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது என்றெல்லாம் வரும் செய்திகளின் பின்னணி ரகசியம் இதுதான்.




                     ஆனால், நம் நாட்டில் இதுவரை ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவது என்பது குறித்து, அரசுதான் முடிவெடுக்க முடியும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாதாரண மக்களின் முகங்களும் அஞ்சல்தலையில் வெளியிடப்படும் திட்டம் ஒன்றினை இந்தியத் தபால்துறை, தில்லியில் தொடக்கி வைத்தது.



              இத்திட்டத்துக்கு, ‘எனது அஞ்சல்தலை’ என்று பெயரும் சூட்டப் பட்டது. பிரமாதமான வரவேற்பு. தொடர்ச்சியாக உ.பி., மும்பை மாதிரி வடஇந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அஞ்சல்தலையில் இடம்பெற்று விட்டார்கள். இதோ இப்போது அஞ்சல்தலையில் தமிழ் முகங்களும் சிரிக்க, நம் ஊருக்கும் வந்துவிட்டது ‘எனது அஞ்சல்தலை’ திட்டம்.



                உயிருடன் இருக்கும் யாரும் இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். ரூ.300/- கட்டணம் செலுத்தினால், 12 அஞ்சல்தலைகள் வழங்கப்படும்.



           இந்த அஞ்சல் தலைகளை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பும் கடிதங்களில் ஒட்டி, அவர்களை  அசத்தலாம்.



           விண்ணப்பிப்பவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும் ஏதேனும் ஓர் அடையாள அட்டையின் நகலை (டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும்.



            தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் இருக்கும் சிறப்பு அஞ்சல்தலை சேகரிப்பு மையங்களில் மட்டுமே, ‘எனது அஞ்சல் தலை’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி இருக்கிறது.



            சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒருவாரத்திலும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு வாரங்களிலும் அஞ்சல்தலைகள் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.



              பொதுமக்களின் வரவேற்பைப் பொருத்து, விரைவில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்" என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீமெர்வின் அலெக்ஸாண்டர் உறுதியினை அளித்திருக்கிறார்.


 
            மறைந்த நமது தாத்தா, பாட்டிகளின் முகத்தை அஞ்சல் தலையில் இடம் பெறச் செய்யவைக்க இத்திட்டத்தில் இப்போதைக்கு இடமில்லை.



          ஆனால், உயிரோடிருக்கும் நம் அம்மா, அப்பா ஆகியோர் (அடையாள அட்டை இருப்பின்) விண்ணப்பிக்கலாம்.



044-28543199 என்கிற தொலைபேசி எண்ணில் பேசினால், 



    ‘எனதுஅஞ்சல் தலை’ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கும் இந்தியத் தபால்துறை விளக்கமளிக்கிறது.

பசியைத் தூண்டும் மருந்து (Buclizine) - மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்டது? அவசியம் படியுங்க!! குழந்தைகளைக் காப்பாற்றுங்க!!!








                    பல ஆண்டுகளாக பல்வேறு மீடியாக்கள் சொல்லி வந்த தகவல்தான். ஆனாலும் உலகின் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை, இந்தியாவில் மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையை சமீபத்தில் பாராளுமன்றக் குழு ஒன்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





                  அதிலும் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் இத்தகைய மருந்துகள் இங்கு அளிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. 








                   இத்தனைக்கும் சுகாதாரத்துறையும், ஒழுங்குமுறை ஆணையமும், இம்மருந்துகளைத் தடை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தாமல் குழப்பத்தில் இருக்கின்றன.மேலும் பாராளுமன்றக் குழு, கடந்த ஆண்டு மே மாதமே இத்தகைய மருந்துகளைத் தடை செய்யும்படி உத்தரவிட்டது. இருப்பினும், இம்மருந்துகள் இன்னும் சந்தையில் இருந்து வருகின்றன. 





                        இவற்றை, சட்டத்திற்கு புறம்பான முறையில் அனுமதித்த, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.






 


                   அண்மையில் பாராளுமன்றக் குழு மேற்கொண்ட செயல் நடவடிக்கை அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு மே மாதம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்த மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தது




                    மேலும், அந்த மருந்துகள் தயாரிக்கப்பட்ட நாடுகளே அவற்றின் விற்பனையைத் தடை செய்திருந்ததால், அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற விதிமுறையும் சுட்டிக்காட்டியுள்ளது. 








                    பெல்ஜியம் நாட்டில் ஒவ்வாமைக்காக தயாரிக்கப்பட்ட பக்லிசைன் என்ற மருந்து, இந்தியாவில் பசியைத் தூண்டும் காரணத்திற்காக குழந்தைகளுக்கும், சிறுவயதினருக்கும் அளிக்கப்படுகின்றது. முறையான மருத்துவ ஆய்வுகளோ, மருத்துவ ஆராய்ச்சியாளர்களோ, உறுதி செய்யாத இந்த மருந்தினை பெல்ஜியம் தடை செய்துள்ளது.








                    இதேபோல், டென்மார்க் நாட்டில் தயாராகும் மனச்சோர்விற்கான மருந்து என்று இங்கு அனுமதிக்கப்படும் தீன்சிட் என்ற மருந்து அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். 




                         இது குறித்து உத்தரவிட்டு பத்து மாதங்கள் கழிந்த பின்னும், நடைமுறைப்படுத்தப்படாத இதே நிலை நீடித்தால், மருத்துவ சுகாதார நெறிமுறைகளைக் காப்பது என்பது இயலாத ஒன்றாகிவிடும் என்று பாராளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.




 O<>O<>O<>O<>O<>O<>O<>O





Authorities unlawfully approve banned drugs, go scot-free


                    People of this country, even babies, are being given drugs banned in other parts of the world. The health ministry and regulatory authority responsible for ensuring the safety and efficacy of medicines sold here continue to dither over banning these drugs despite a parliamentary committee specifically recommending an immediate ban on such drugs.



கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள கட்டுரையைப் படிக்கவும்.