Wednesday, 11 September 2013

'தன் கையே தனக்கு உதவி'..........குட்டிக்கதை



வினோத்தும் விக்னேஷும் நண்பர்கள்..இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.

வினோத் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தனர்.அவனுக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிவிப்பது..அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அணிவிப்பது...அவனுக்கு தலைவாரிவிடுவது எல்லாம் வேலையாட்களின் வேலை...

ஒரு நாள் அவன் பள்ளி செல்லும்வழியில் இருந்த விக்னேஷ் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.

அப்போது விக்னேஷ்...தன் ஷூவிற்கு பாலிஷ் போடுவதைப் பார்த்தான்...'உன் ஷூவிற்கு நீயே வா பாலிஷ் போடுவாய்' என வினோத் ஆச்சிரியத்துடன் கேட்டான்.

'ஆமாம்..நீ வேறு யார் ஷூவிற்கு பாலிஷ் போடுவாய் 'என்று கிண்டலாக பதிலுக்குக் கேட்டான்..விக்னேஷ்.

'என் ஷூவிற்கு வேலையாட்கள் தான் பாலிஷ் போடுவார்கள் 'என்றான் வினோத்.

'அப்படியா..நமக்காக நம் வேலையை பிறரைச் செய்யச் சொல்வது தவறல்லவா..'.கடவுள் நம் வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நமக்கு இரு கைகளை கொடுத்திருக்கிறார் 'என்றான் விக்னேஷ்.

அது கேட்டு தன் தவறை உணர்ந்த வினோத்..இனி தன் வேலைகளைத் தானே செய்யவேண்டும் என்று தீர்மானித்தான்.

தன் வேலையைத் தானே பார்ப்பது ..தவறில்லை..அது நம்மை மேலும் சந்தோஷமாக வைக்கும்.

(ஆப்ரஹாம் லிங்கன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது)

ஆட்டின் புத்திசாலித்தனம்.........குட்டிக்கதை



ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..

அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...

ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..
கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.

தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு ..தூங்கிக்கொண்டிருந்த ஊர்மக்கள் விழித்தெழிந்து வந்து ஓநாயை அடித்துக் கொன்றனர்.

புகழ்ச்சியில் மயங்கிய ஓநாய் உயிரைவிட்டது.ஊரில் இருந்த ஆடு..மாடுகள் பயமின்றி வாழ்ந்தன...மாடசாமியின் ஆட்டின் புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

தொழில்நுட்ப தேர்வு இன்று முடிவு வெளியீடு!



தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Click Here